What is the Tamil meaning of third parkadal kadaithal?

 

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து, மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். தேவர்களும், அசுரர்களும் இரு பக்கமும் பிடித்து இழுத்ததில் மலையில் உடல் அழுந்தி ஏற்பட்ட வலியால், வாசுகி பெரும் மூச்சு விட்டது. அது விஷமாக மாறி கடலில் கலந்து ஆலகால விஷமாக வெளிப்பட்டது. ‘அனைத்து பிரபஞ்சங்களையும் அழிக்கும் வல்லமை கொண்ட அந்த விஷத்தை அழிப்பது எப்படி?’ என தெரியாமல் அனைவரும் அஞ்சி ஓடினர்.

உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான், அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அந்த விஷம் ஈசனை எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக, அவரது தொண்டை பகுதியை அழுத்திப் பிடித்து, உடலுக்கும் விஷம் இறங்காமல் தடுத்தாள் பார்வதி தேவி. விஷமானது ஈசனின் தொண்டையிலேயே நின்று விட்டது. இதனால் அவரது கழுத்துப்பகுதி நீலநிறமாக மாறியது. இதன் காரணமாகவே அவர் ‘நீலகண்டன்’ என்ற பெயரைப் பெற்றார்.


முதலாவதாக வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் எடுத்து அருந்திய பின், பயம் தெளிந்த தேவர்களும், அசுரர்களும் மீண்டும் மலையை கடைய முற்பட்டனர். மலையை கடையக் கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன.

திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்தவைகள்:

* ஆலகால விஷம்

* காமதேனு

* உச்சை சிரவஸ் என்னும் வெள்ளைக்குதிரை

* ஐராவதம் என்னும் வெள்ளை யானை

* கற்பக விருட்சம்

* அப்சரஸ்திரிகள்

* அகலிகை என்ற அழகான பதுமை

* திருமகள் என்னும் லட்சுமி

* அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி

இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள்.

மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.

Post a Comment

Previous Post Next Post