தைப்பொங்கல்:
·
பொங்கல்,
உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக்
கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும்
ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
·
தமிழர்
திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,
ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்
ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும்
அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் வரலாறு:
·
ஆடி
மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின்
விளைச்சலை அறுவடை செய்து பயன்
அடையும் பருவமே தை மாதம்
ஆகும்.
·
அறுவடையில்
கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப்
புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல்
சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும்
விழாவே பொங்கல் விழாவாகும்.
நான்கு நாள் திருவிழா:
·
போகி
·
தைப்பொங்கல்
·
மாட்டுப் பொங்கல்
·
காணும் பொங்கல்
போகி
பொங்கல் பண்டிகை
நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை என்பது
‘மார்கழி’ மாதம்
முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன
கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட
பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.
தைப்பொங்கல்
தை மாத முதல் நாள்
பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல்:
உழவுத்
தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே
இந்நாளாகும்.
காணும் பொங்கல்
இந்நாளில்
மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச்
சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப்
பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில்
நான்காம் நாள் இடம்பெறும்.இது
பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத்
திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத்
திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத்
திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத்
திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில்
நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
பொங்கலை ஒத்த
பிற
விழாக்கள்:
·
இந்தியாவின்
வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.
·
மகரம்
என்றால் சூரியன் என்று பொருள்.