·
வேர்ப் பாலம் (Living root bridges) என்பது
உயிருள்ள மரங்களின் வேரைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும்.
·
இது
இரப்பர் மரங்களின் மேல் பக்கமாக உள்ள காற்று வேர்களை கையால் வேண்டியவாறு வளைத்து முறுக்கி
இணைத்து உருவாக்கப்படுகின்றன.
·
இவ்வகை பாலங்கள் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தென் பகுதியில் உள்ள காசி மற்றும் ஜெய்ந்தியா மலைப்பகுதிக்கு இடையில் ஷில்லாங் பீடபூமி பகுதி மக்களால் அமைக்கப்படுகின்றன.
·
பாலம் அமைக்க வேண்டிய பகுதியில் வளைந்து கொடுக்கும் மர வேர்களை முறுக்கி ஆற்றின் மறுபுரம் நோக்கி செலுத்துகிறார்கள்.
·
இந்த செயல்முறையில் பாலங்களை அமைக்க 15 ஆண்டுகள் வரை ஆகின்றது.
·
இந்த பயனுள்ள உயிருள்ள வேர்ப் பாலத்தை அமைக்கும் நுட்பம் பல நூறு ஆண்டுகளாக பரிணாமித்து வந்துள்ளது.
·
இந்த பாலம் மரங்களின் வேர் தடிமன் கூடகூட வலிமை மிக்கதாக மாறுகிறது. பாலத்தின் ஆயுள் மரங்களின் வேர் ஆரோக்கியமாக உள்ளவரை நீடிக்கிறது.
·
சில பாலங்கள் 50 பேர் வரை எடை தாங்கக் கூடியனவாகவும், சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டவையாகவும் உள்ளன.
·
மேகாலயா வேர்ப் பாலங்களில் சில 500 ஆண்டுகளை விட பழமையானவையாகும்.